சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன்முன்னிலை வகித்தார். ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.