பதிவு செய்த நாள்
19
செப்
2016
12:09
குரோம்பேட்டை: உலக மக்களின் நன்மைக்காக, 100 மணி நேரம் நடந்த, அகண்ட மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம் நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய சுவாமிகள் நினைவாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும், தொடர்ந்து, 100 மணி நேரம் அகண்ட மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம் நிகழ்ச்சியை, கடையநல்லுார் கே.எஸ்.ராஜகோபால் தாஸ் பாகவதர் நடத்தினார். குரோம்பேட்டை ஏர்.ஆர்.வி., மஹாலில், கடந்த, 14ம் தேதி முதல், தொடர்ந்து ஐந்து நாட்கள், இடைவிடாமல் நடந்த இந்நிகழ்ச்சி, நேற்று இரவு நிறைவு பெற்றது. முன்னதாக, நேற்று மாலையில் இருந்து, நுாற்றுக்கணக்கானோர் கே.எஸ்.ராஜகோபால் தாஸ் பாகவதருடன் இணைந்து நாம ஸங்கீர்த்தனம் இசைத்தனர். அதை தொடர்ந்து, இரவு, 8:01 மணிக்கு, ஸ்ரீமதி சுபத்ராஜி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.