விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. வண்ணான்குளக்கரையில் இருந்து துர்க்கை அம்மன் கோவில் வரை நுாற்றுக்கணக்கான சுமங்கலி பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மாலை 6.00 மணிக்கு மேல் இரவு 7:30 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கருட வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.