Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநியில் நவராத்திரி விழா அக். 1ல் ... மணியார்பாளையம் கோவிலில் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர், கொங்கரத்தியில் புரட்டாசி சனி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
12:09

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர்,கொங்கரத்தி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு பக்தர்கள் வழிபட்டனர். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு காலசந்தி பூஜையுடன் பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். பின்னர் உற்சவர் சர்வ அ<லங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவியருடன் திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் வருகையால் நடைசாத்தப்படுவது பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் தொடர்ந்து பெருமாளை தரிசித்தனர். கொங்கரத்தி வன்புகழ் நாராயணப் பெருமாள் கோவிலில் அதிகாலை 4.15 மணி முதல் பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர் ஏகாந்த அலங்காரத்தில் பிரகார வலம் வந்து கருட மண்டபத்தில் பெருமாள் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருப்புத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar