பதிவு செய்த நாள்
19
செப்
2016
12:09
பழநி:பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா அக்.,1ல் காப்புகட்டுதலுடன் துவங்கி, அக்.,11 வரை நடக்கிறது.விழாவின் முதல்நாளான அக்.,1ல் பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில் காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டப்படும். மலைக்கோயில், போகர் ஜீவசமாதியில் காலை, 10:30 மணிக்கு காப்புகட்டப்படும். அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் எழுதருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து பகல், 12:00 மணி உச்சிகாலபூஜை வேளையில், மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு, திருஆவினன்குடி கோயிலிலும் காப்புகட்டுதல் நடக்கிறது.பெரியநாயகியம்மன் கோயிலில் அக்.,1 முதல் அக்.,11 வரை தினமும் மாலை, 6:00 மணி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.
சூரன் வதம்: அக்.,11ல் விஜயதசமியன்று மலைக்கோயில் பகல், 12:00 மணி உச்சிகால பூஜையும்; மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை முன், பகல், 1:30 மணிக்கு நடைபெறும். பகல், 3:00 மணி அளவில் மலைக்கோயிலிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும். அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வேல் உடன் புறப்பட்டு கோதைமங்கலம் சென்றடையும். அங்கு கோதீஸ்வரர் ஆலயம் முன் அம்புபோடுதல் நிகழ்ச்சி நடக்கும். போகர் பழநி ஆதினம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் துர்க்காவாக ஆவாஹனம் ஆகி வாழைமரம், வன்னிமரத்தில் அம்பு எய்து மகிஷாசூரன் வதம் நடக்கிறது.