இடுப்பில் குழந்தையுடன் காட்சி தரும் அம்பாளை திருநெல்வேலி மாவட்டத்தில் இசக்கியம்மன் என்பர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பார்வதிதேவி இடுப்பில் முருகப்பெருமானுடன் காட்சி தருகிறாள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டிலுள்ள நவக்கிரக கோயிலான திருவெண்காடர் (புதன் ஸ்தலம்) கோயிலில் ஒரு அம்பாள் பிள்ளையுடன் காட்சி தருகிறாள். இவளை இடுக்கி அம்மன் என்கின்றனர். குழந்தையை இடுப்பில் வைத்திருப்பதை கிராமங்களில் இடுக்கி வைத்திருக்கிறாள் என்பர். இந்தச் செயலையே அம்பாளின் பெயராக்கி விட்டனர்.