கரூர்: க.பரமத்தி அருகே, பாலமலை முருகன் கோவிலில் நேற்று, 18வது திருப்புகழ் திருப்படி விழா நடந்தது.
இதையடுத்து, முருகப்பெருமானுக்கு விசேஷ சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கரூர் ஜெகன்நாத ஓதுவார் பக்தர்கள் குழுவினர் கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். பின், விநாயகர் வழிபாட்டுடன் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் நடந்த விழாவில், அனைத்து படிகளுக்கும், வாழை இலை வைக்கப்பட்டு, பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி தீபம் ஏற்றி பக்தர்கள் பூஜைகள் செய்தனர். மஹா தீபராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பழனி வெங்கடேசன் ஓதுவார், குழுவினரின் இசை சொற்பொழிவு நடந்தது.