பதிவு செய்த நாள்
29
செப்
2016
12:09
நாமக்கல்: வளையப்பட்டி பெருமாள் கோவிலில், வரும், 1ம் தேதி, கருட சேவை நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் உள்ள, பிரசித்தி பெற்ற, பிரசன்ன வெங்கட ரமண பெருமாள் கோவிலில், வரும், 1ம் தேதி , புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை நடக்கிறது. அன்று, அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், காலை, 7:00 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை, 6:40 மணியளவில், பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். மேலும், அக்., 10ம் தேதி, திருவோண பூஜையும், அன்று மாலை சத்ய நாராயண பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.