பதிவு செய்த நாள்
29
செப்
2016
12:09
திருமுக்கூடலூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது. கரூர் பசுபதி ஈஸ்வரன் கோவில், ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர் கோவில், மண்மங்கலம் மரகதவள்ளி அம்பிகை மணிகண்டேஸ்வரர் கோவில், நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், புன்செய் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் சிவன் கோவில், குளித்தலை கடம்பர் கோவில், அய்யர்மலை சிவன் கோவில், திருமுக்கூடலூர் ஈஸ்வரன் உட்பட பல்வேறு கோவில்களில், நேற்று பிரதோஷ வழிபாடு முன்னிட்டு, நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.