கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மஹா விருத்தி ஜெயம் ஆயுத்திய ஹஸ்திரிய யாகத்தை, போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் திருவிகா, ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.