கிருஷ்ணர், கம்சனைக் கொன்றதும் அவனது ஆன்மா வைகுண்டத்தை அடைந்தது. என்ன? கெட்டவனுக்கு வைகுண்டமா? என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படலாம். கொடுமைக்காரன் என்றாலும், சதா சர்வகாலமும் கிருஷ்ணரையே நினைத்தவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்துகொண்டே பகவானை சிந்தித்தவன். அதனால்தான் கம்சனுக்கு வைகுண்டத்தில், சாரூப்ய சொரூபம் கிடைத்தது. இந்தச் சொல்லுக்கு, நாராயணனைப் போலவே உருவெடுத்தல் என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயணனை வணங்கி அவர் வடிவத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.