வடவள்ளி: வடவள்ளி பொம்மணம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள, லட்சுமி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாட்டப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று விநாயகருக்கு லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, லட்சுமி உருவமாக மாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கு 7கிலோ சந்தனம் பயன்படுத்தப்பட்டது.