விழுப்புரம்: விழுப்புரம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜைகள் துவங்கியது. விழுப்புரம் வ.உ.சி., தெரு செல்வமுத்து மாரி யம்மன் கோவிலில் இரண்டாமாண்டு நவராத்திரி கொலு பூஜைகள் துவங்கியது. இதனையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங் காரம் செய்து வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் அமைத்து துர்கா வழிபாடு பூஜைகள் நடந்தது. மாணவ, மாணவிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.