காரைக்குடி,;வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில்,நவராத்திரி இசை விழா 2ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சின்மயா சகோதரிகள் உமா, ராதிகாவின் கானடா கல்யாணிராக ஆலாபனை இசை நிகழ்ச்சி நடந்தது. சகானா சாம்ராஜ் வழங்கிய அடானா, கேதார கவுளை ராக ஆலாபனைகள் ரசிகர்களை கவர்ந்தது. விஜய் கணேஷின் வயலின், குரு ராகவேந்திரனின் மிருதங்கம் வாசித்தனர். மும்பை சவிதா ஸ்ரீராம் பியாகடை, பிலஹரி, சாவேரி ராக ஆலாபனைகளை பாடினார். ஏற்பாடுகளை விழா தலைவர் துரைராஜ், செயலாளர் அய்யக்கண், அறங்காவலர் கணபதி அம்பலம் செய்திருந்தனர்.