பதிவு செய்த நாள்
06
அக்
2016
11:10
மணலி புதுநகர் : மணலி புதுநகர் அய்யா கோவில், பத்து நாள் திருவிழா நாளை கோலாகலமாக துவங்க உள்ளது. மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருவிழா, நாளை துவங்கி, பத்து நாட்கள் நடக்கவுள்ளது. நாளை திருநாம கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. விழா நடக்கும் பத்து நாட்களும், காளை, அன்னம், கருட, மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர் முக சிம்மாசனம், குதிரை, இந்திர, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அய்யா பதிவலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பத்தாம் நாளான, 16ம் தேதி ஞாயிற்று கிழமை, மதியம் நடக்கவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க, மணலி புதுநகர் மட்டுமின்றி தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்று, நள்ளிரவு, மலர் பல்லக்கு வாகனத்தில், அய்யா பதிவலம் வருதல் மற்றும் திருநாமக் கொடி அமர்தல் நிகழ்வுடன், திருவிழா நிறைவு பெறும்.