Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி வழிபாடு: கோவில்களில் ... வெற்றி திருநாளான விஜயதசமி: கொண்டாடுவது ஏன்? வெற்றி திருநாளான விஜயதசமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலத்தில் தோன்றிய நவராத்திரி நாயகியர்!
எழுத்தின் அளவு:
கோலத்தில் தோன்றிய நவராத்திரி நாயகியர்!

பதிவு செய்த நாள்

08 அக்
2016
05:10

நவராத்திரி நாட்களில் வீட்டின் வாசல் முன்பகுதியிலும், பூஜை அறையிலும் விதவிதமாகக் கோலங்கள் போடுவது வழக்கம். இந்தக் கோலங்கள் மங்களகரமான வாழ்வினைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால்விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது தேவியர்களும், பராசக்தியான அம்பிகையின் அம்சம் என்று போற்றப்படுகின்றனர். மேலும், இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில், குறிப்பாக புனிதத்தலமான கங்கை நதி ஓடும் காசி மாநகரில் கோயில்கள் உள்ளன. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகவுரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் நவராத்திரி காலங்களில் வழிபடுகிறோம்.

இறைவன், ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துக்கள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக, அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். அன்னையின் முதல் வடிவமான சைலபுத்ரி இமவான் மகளாகப் பிறந்து, கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை மணந்தாள். இத்தேவியை ஹேமாவதி என்றும் அழைப்பர். இந்திரனுக்கு பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் செய்வித்தவள் என்று உபநிடதம் கூறுகிறது. வீரத்தின் அடையாளமாகக் காளையை வாகனமாகக் கொண்டவள். இரண்டு கரங்களிலும் சூலமும், தாமரையும் தாங்கியிருப்பவள், தலையில் கிரீடம், கழுத்து, காதுகள், புஜங்கள், கரங்கள், கால்களில் ஆபரணங்கள் அணிந்து, முகத்தில் மங்காத புன்னகையுடன் ஆனந்தமயமாகக் காட்சி தரும் இத்தேவியை வழிபட மங்களகரமான வாழ்வு கிட்டும், திருமணத்தடை நீங்கும்.

இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோயில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத்தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். பரமேஸ்வரனின் திரிபுரதாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம்  அஷ்ட வசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருவாள். இத்தேவி அணித்திருக்கும் தூய வெண்ணிற ஆடை இவளது தவக்கோலத்தினைக் காட்டுகிறது. வலக்கையில் ஜப மாலையும், இடக்கையில் கமண்டலமும் தாங்கியிருக்கிறாள். இறைவனை மணக்க தவக்கோலம் மேற்கொண்டு இறைவனை மணந்தாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதி பிறக்கும். எதையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இரண்டாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் துர்கா காட் பாடித்துறையில் கோயில் உள்ளது.

திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப்போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார் இறைவன். இந்த நடனம் ஊர்த்துவதாண்டவம் எனப்படும்.

இந்த ஆட்டத்தின் போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சித்திர காண்டா. இந்த தேவி தங்கமயமான உடலைக் கொண்டவள். கிரீடமும் ஆபரணங்களும் தரித்தவள், பத்துக் கரங்கள் உடையவள், அவை ஒவ்வொன்றிலும் சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜபமாலை ஆகியவற்றை பூண்டிருப்பாள். அபய, வரத முத்திரைகளுடன் பிற இரு கரங்கள் திகிழ்கின்றன. புலி மீது அமர்ந்து காட்சி தருபவள். இத்தேவியின் பெயரைக் கேட்டாலேயே எல்லா தீவினைகளும் அழியும், மனதிற்கு சாந்தி கிட்டும். மூன்றாம் நாள் வழிபடப்படும் இத்தேவிக்கு, காசிக்கு அருகே கோயில் உள்ளது. சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது, இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக் கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள். கூஷ் மாண்டா, எட்டுகரங்கள் கொண்டவள். அவற்றில் தாமரை, சக்கரம், வில், கதை, அம்பு, ஜபமாலை, கமண்டலம், பான பாத்திரம் போன்றவற்றை ஏந்தியிருப்பாள். இவள் வேங்கை மீது அமர்ந்திருப்பாள். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள்.

கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்றும் ஒரு பொருள் உண்டு. பூசணிக்காயை பிளந்து அர்ப்பணித்து வேண்டிக் கொண்டால், வேண்டியது கிட்டும். நான்காம் நாள் வழிபடப்படும் இந்த அன்னைக்குக் காசியில் கோயில் உள்ளது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது, வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் உண்பார். அப்போது ஆடிய புஜங்கதாண்டவத்தின் போது வலதுகால் பெருவிரலால் வரையப்பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையை வாகீஸ்வரி என்றும் சொல்வர். நான்கு கரங்கள் கொண்டவள். இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, ஒரு கரத்தால் கந்தனை அணைத்து மடியில் வைத்திருப்பாள். மறுகரத்தால் வரத முத்திரை காட்டுகிறாள். இந்தத் தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்குக் கோயில் உள்ளது.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே, இது முனி தாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்தத் தாண்டவத்தின் போது, சிவ பெருமான் இரு கால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. நான்கு கரங்கள் கொண்டவள். தன் நான்கு கரங்களிலும் தாமரை, வாள் ஏந்தி, அபய வரத முத்திரை காட்டி சிங்கத்தின் மேல்தொடை மேல் கால் போட்டு அமர்ந்திருப்பாள். சிம்ம வாஹினி என்றும் சொல்வர். ஆறாம் நாள் வழிபடப்படும் இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். கன்னிப்பெண்கள் நல்ல மணாளனை அடைய இவளை வேண்டிக்கொண்டால் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுபவள் என்று பாகவதம் கூறுகிறது. காசி, ஆத்ம விஸ்வேஸ்வரர் கோயிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோஷ்ட தெய்வமாக வழிபடப்படுகிறாள். யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூதக் தாண்டவம் இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள்.

காளராத்ரி புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத்தோற்றத்தில் காட்சி தருவாள். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். கைகளில் மின்னல் போன்ற ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருபவள். இவளது வாகனம் கழுதை. இவளை வழிபட தீயவர்கள் அழிவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்குக் கோயில் உள்ளது. ஏழாம் நாள் வழிபடப்படும் தெய்வம் இவள். தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்டிடவே, இறைவன் அந்த அசுரர்களை அழித்து பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து மகா கவுரி என்ற அன்னை தோன்றினாள்.

மகாகவுரி வெண்ணிற ஆடை அணிந்தவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ஒன்று நெடிதுயர்ந்த சூலத்தை தரையில் ஊன்றியபடி பிடித்திருக்கிறது. இன்னொரு கரம் தன் ஒலியாலேயே எதிரிகளையும், தீவினைகளையும் விரட்டி அடித்துப் பொடிப் பொடியாக்கும் டமருகத்தைப் பற்றியிருக்கிறது. மூன்றாவது கரம் தன்னைச் சரணடையுமாறு வரத ஹஸ்தமாகத் கரம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கும் அபயமுத்திரை காட்டுகிறது. சிவபெருமானைப் போல காளை மீது அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் இத்தேவியை வழிபட பசிப்பிணி நீங்கும், உடல் நலம் வளம் பெறும். இத்தேவிக்கு காசி அன்னபூரணி கோயிலில் சன்னிதி உள்ளது. இந்தத் தெய்வத்தை எட்டாம் நாள் வழிபடுகிறார்கள்.

கயிலைநாதன் சிருங்காரதாண்டவம் ஆடிய போது, நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது, அவர் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்தி தாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஆதி சத்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழு முதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள்.

தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் இந்த அன்னை தன் நாற்கரங்களில் தாமரை, சங்கு, சக்கரம், கதை போன்றவற்றைத் தாங்கியிருக்கிறாள். இத்தேவியை வழிபட முக்தி கிட்டும். ஆனந்த சொரூபியான இத்தேவி பாவங்களையும் தீவினைகளையும் அழிக்கும் சக்தி கொண்டவள். ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் சித்தி தாத்ரி சங்கடா என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளாள். மேற்கண்ட தகவல்களை காசிபுராணம் விவரிக்கிறது. தென்னகத்தில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என்னும் வரிசையில் நவராத்திரி கொண்டாடுகிறோம். காசியில் உள்ளவர்கள், சிவபெருமான் ஆடிய தாண்டவத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்பது தேவியரின் சுதை விக்கிரகங்களை வாங்கி வந்து கொலு வைப்பார்கள். பத்தாம் நாளை, பார்வதி தேவி மீண்டும் தாய் வீடான இமயத்திற்குச் செல்லும் நாளாகக் கொண்டாடுவர். அன்று, சுதையினாலான அம்பாள் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்வர். கைகளில் வளையல்கள் அணிவித்து, கால்களுக்கு சிவப்பு சாந்து பூசி, மலர்களால் அலங்கரிப்பர். வேதவிற்பன்னரை வரவழைத்து சிறப்புப் பூஜை செய்வதும் உண்டு. பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்குத் தங்கள் சக்திக்கு ஏற்ப புடவை மற்றும் ரவிக்கைத் துணிகளை மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய், பழங்கள், இனிப்புப் பண்டங்களை, அதற்குரிய வாழை மட்டைத் தட்டுகளில் வைத்து வழங்குவர். பிறகு பத்து நாட்களும் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் உருவச்சிலைகளை கங்கை நதியில் கரைத்து விழா கொண்டாடுவர்.

காசி வருண்காட் அருகில் துர்க்கா தேவி கோயிலிலுள்ள இந்தப் பத்து தேவியரின் பளிங்குச் சிலைகளுக்குப் பூஜைகள் செய்து நவராத்திரி விழாவினை பூர்த்தி செய்கிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னதியில் அருள்பாலித்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar