கோவை: புரட்டாசி நான்காம் சனிக்கிழமையையொட்டி கோவை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வைகுண்டநாத அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை நேரு நகர் சீனிவாசப் பெருமாள் கோவிலில் ராஜ ஆலங்கரத்தில் பெருமாள் அருள் பலித்தர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், கோவை லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் விளக்கு வைத்து வழிபட்டனர். கோவை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் புரட்டாசி நான்காவது சனிகிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ராமர்,சீதை,லட்சுமணன் அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி., காலனி பின்புறம் உள்ள ஸ்ரீ சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிதார். புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை ஒட்டி வெள்ளி கவச அலங்காரத்தில் கோவை ஈச்சனாமி அருகே உள்ள தேவி பூதேவி ஸமேத சுந்தரராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.