காளியாகுடியில் ஸ்ரீ கமலாம்பாள் ரிக்வேத பாடசாலை தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2016 05:10
மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியை அடுத்த காளியாகுடி கிராமத்தில் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ மகா சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் மற்றும் பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி சுவாமிகள் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ கமலாம்பாள் சாரிடபில் டிரஸ்ட் சார்பில் ரிக் வேத பாட சாலை விஜயதசமி நன்னாளான இன்று தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று ஆவஹந்தி ஹோமம், ஐகமத்ய ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற து. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தை ராஜேஷ் மற்றும் கிருஷ்ணன் கனபாடிகள் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். தொடர்ந் து வேதபாராயனம் மற்றும் பாடசாலை தொடக்கவிழா நடைபெறுகிறது. காளியாக்குடி நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ கமலாம்பாள் சாரிடபில் டிரஸ்ட் ரவி நாராயணன், சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அருகில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காளி தேவி வழிபட்ட ஸ்ரீ கம லாம்பாள் சமேத காளீஸ்வரர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.