பண்டாசுரனுடன் போர் செய்து அவனை, அம்பாளால் அழிக்க முடியவில்லை. எனவே , சிவபெருமானை வழிபட்டு விஜய தசமியின் போர் செய்யும்போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னிமரத்தை வெட்டி அசுரனை வதம் செய்தாள். இதுவே நாளடைவில், கன்னி வாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனை சம்ஹாரம் செய்த நேரம் மாலை வேளை. எனவே, விஜயதசமியில் இதனை நினைவுபடுத்தும்விதமாக கோயில்களில் வாழை வெட்டுவது வழக்கத்தில் உள்ளது!