கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தம் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் இரட்டை குடையுடன் குதிரைவாகனத்தில் எழுந்தருளி வன்னிமர கூடாரத்தின் மீது அம்பு எய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவர் சந்திரசேகரர் சுவாமிகள் யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.