ராஜபாளையம்: விஜயதசமியை முன்னிட்டு அட்சர அப்யாஸ் எனும் குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி ராஜபாளையம் சொக்கர் கோயிலில் நடந்தது. காலையில் துவங்கிய விழாவில் 200 குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாம்பாலத்தில் இருந்த அரிசியில் ஓம் என துவங்கி தமிழ் எழுத்துக்களை கோயில் குருக்கள் ரமேஷ் எழுத பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை கோயில் பரம்பறை அறங்காவலர்கள் ராமசுப்ரமணியராஜா மற்றும் சுதர்சனம் செய்திருந்தனர்.