வேப்பூர்: முதல்வர் ஜெ., பூரண குணமடைய நல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வேப்பூர் வில்வனேஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. வேப்பூர் கிளைச் செயலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலர் பச்சமுத்து முன்னிலை வகித்தார். பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் ஊராட்சி செயலர்கள் காந்தி, முருகேசன், மல்லன், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.