கிள்ளை: கிள்ளை அடுத்த மேல் அனுவம்பட்டு நாடார் நகர் ஸ்ரீசர்வ சித்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (18ம் தேதி) காலை 10:40 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று (19ம் தேதி) இரண்டாம் கால யாகசாலை பூஜைக்குப்பின் கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்குள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் செய்து வருகின்றனர்.