மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஞ்சூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான கிருத்திகை பூஜை நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு, கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், முருக பெருமானுக்கு பால்,பன்னீர் உட்பட,12 அபிஷேகம் நடந்தது. பின், நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, முருக பெருமானை வேண்டினர். பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சி நடந்தது. பூஜையையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.