பதிவு செய்த நாள்
19
அக்
2016
03:10
புதுமண தம்பதிகளுக்கு, தலை தீபாவளி மிகவும் ஸ்பெஷல். திருமணத்துக்கு பின் வரும் அனைத்து பண்டிகைகளும், மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும், தலை தீபாவளி மட்டும், மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு. புதிதாக மணமுடித்த மணமக்களை, தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண் ணின் பெற்றோர், அவர்களது வீட்டுக்கு சென்று, வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் கொண்ட சீர்வரிசை வைத்து, தலை தீபாவளி கொண்டாட, வீட்டுக்கு வருமாறு அழைப்பர். அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே, பெண்ணின் வீட்டுக்கு செல்வர். தீபாவளி அன்று, அதிகாலை எழுந்து, பெண்ணும், கணவரும், எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர். பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின், இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவி யின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதுதான் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.