தீபாவளி தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது இந்துக்கள் பண்டிகையென பலரும் நினைத்துள்ளார்கள். இந்துக்கள் மட்டும் இல்லை, பல மதத்தவரும், பல்வேறு மாநிலத்தவரும் தீபாவளி கொண்டாடும் முறையும் விதமும் வேறு, சிறப்பானது. தீபங்களின் ஆவளியான தீபாவளியை நம்மவர்கள் விளக்குகளால் அலங்காரம் செய்து கொண்டாடவில்லையெனினும் வட நாட்டவர் மாலை நேரங்களில் விளக்குகளால் வீடு முழுவதும் அலங்கரித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னதிருந்தே மின் விளக்கு சரங்களால் வீடுகள் அலங்கரிக்கப்பட்டுவிடுன்றன. நமது பொங்கல் பண்டிகை போலானது வடக்கிந்திய தீபாவளி. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாள் வீடை சுத்தம் செய்து பழைய சாமான்களை எரிப்பதாகும். இந்த நாள் நரக்சௌதஸ் என அழைக்கப்படுகிறது. வீட்டின் பழைய பொருட்களை வெளியேற்றி வீட்டு வாசலில் சிறு அகல் தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும் நாளிது.