வடமதுரை, வடமதுரையில் மழை வேண்டி ஊர்பொதுமக்கள் வனதேவதை வழிபாடு நடத்தினர். ஏழுமலையான் கோயிலில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில்களுக்கு சென்றனர். இந்த கோயில்களின் பூஜாரிகளுடன் மந்தை குளத்தில் அமைந்துள்ள பீடத்தில் வனதேவதைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் ஏ.வி.பட்டி அடுத்துள்ள பண்ணமலை அடிவாரத்திலுள்ள கன்னிமார் கோயிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். * புத்துாரில் கோயில் வீட்டில் இருந்து பொதுமக்கள் ஊர்வலமாக முத்தாலம்மன் கோயிலுக்கு சென்று மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கிராமத்தினர் புத்துாரில் இருந்து 5 கி.மீ., துாரம் நடந்து முடிமலை உச்சியில் ஏறி அங்குள்ள முடிக்கல் கருப்புச்சாமி கோயில் சென்றனர். அங்கிருந்த தீர்த்த கிணறில் இருந்து நீர் எடுத்து கருப்புச்சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.