விழுப்புரம்: முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, வளவனுார் கலத்துவாழியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. பேரூராட்சி சேர்மன் முருகவேல் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் ஜெகதீசன், கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், வார்டு செயலாளர்கள் சீனுவாசன், கவுன்சிலர் பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் குமார், கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்கள் பங்கேற்றனர்.