பதிவு செய்த நாள்
24
அக்
2016
12:10
ஓசூர்: ஓசூர் ஏரித்தெரு சாய்பாபா கோவிலில், அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் கோவில், தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். ஓசூர் ஏரித்தெரு சாய்பாபா கோவிலில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, நேற்று காலை, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பால்நாராயணன், நகராட்சி தலைவர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.