பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
விழுப்புரம்: முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி, விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., சார்பில் மிருத்யுஞ்சய யாகம், ஆயுசு யாகம் நடந்தது. திருவாமாத்துார் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவி லில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, மிருத்யுஞ்சய யாகம், ஆயுசு யாகத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய பெருந்தலைவர் விஜயா சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் முரு கன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் அழகேசன், துணை தலைவர் மணிமாறன், மருத்துவரணி தலைவர் கலைசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் முனுசாமி, ஜனார்த்தனன், திருவாமாத்துார் கிளை நிர்வாகிகள் குருநாதன், தயாளன், யுவராஜ், கோபாலகிருஷ்ணன், கருணாநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜ், கிருஷ்ணகுமார், ஏழுமலை, மணி, அற்புதம் கணபதி, அருணகிரி, சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் ரவி, ரமேஷ், நாகமுத்து, நடராஜன், மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், சாந்தராஜ், வேலு, பழனி, தனசேகர், குமரவேல், அப்துல்ரகீம், காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.