Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனிதரில் மேலானவர்! செல்வவளம் தரும் வழிபாடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மற்றவர் நலனுக்காக பாடுபடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
04:10

ஞானத்தை உபதேசிக்கும் நுõல்களில் கிருஷ்ணரின் பகவத்கீதைக்கு சிறப்பு அதிகம். அது போல பண்டிகைகளில் தீபாவளி பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. நாடு முழுவதிலும் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. புத்த, சமண மதத்தினரும் இந்நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பிராக்ஜோதிஷ்புரம் (அசாம் மாநிலம்) என்னும் நகரத்தை பவுமன்(நரகாசுரனின் இயற்பெயர்) என்பவன் ஆட்சி செய்தான். பூமிதேவியின் புதல்வனான அவன், தவசக்தியால் வரங்களைப் பெற்றான். அக்னி கோட்டை, வாயுக்கோட்டைகளை அமைத்துக் கொண்டு பாதுகாப்புடன் வாழ்ந்தான். சாதுக்கள், பெண்கள் என அனைவரையும் துச்சமாக எண்ணித் துன்புறுத்தினான். பகவான் கிருஷ்ணர் பிராக்ஜோதிஷ்புரம் சென்று, பல உத்திகளைக் கையாண்டு கோட்டைகளை அழித்து நரகாசுரனைக் கொன்றார். அவனது தாயான பூமிதேவி, பகவான் கிருஷ்ணரின் கையால் மோட்சம் கிடைத்ததை அறிந்தாள். “மகன் மறைந்தது துக்கம் என்றாலும், உலகில் உள்ள அனைவருக்கும் இது மகிழ்ச்சியான நாள். இந்நாளில் அவர்கள் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, நல்ல விருந்து உணவைச் சாப்பிட வேண்டும்,” என்று பிரார்த்தித்து வரமாகப் பெற்றாள்.

பகவானை நேரில் தரிசித்ததால் ஞானம் அடைந்த நரகாசுரன், இனி தன் இறப்பை மக்கள் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்வர். ‘துலா மாச மகாத்மியம்’ என்னும் நுõலில் தீபாவளி பற்றிச் சொல்லும் போது, “தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய் தேய்த்து இந்நாளில் வெந்நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ‘உஷத் காலம்’ என்னும் அதிகாலையில் நீராட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தான் துன்பப்பட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் மனப்பான்மையை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நீதியை இந்த பண்டிகை உணர்த்துகிறது. நரகாசுரனின் தாயான சத்தியபாமாவுக்கு மகனை இழந்த துன்பம் இருந்தாலும், மற்றவர்கள் அதைக் கொண்டாடி மகிழ, கிருஷ்ணரிடம் வரம் கேட்டு வகை செய்திருக்கிறாள். இதன் காரணமாகவே தீபாவளி சம்பந்தமான புராணக்கதையையும், அந்த பண்டிகையையும் இவ்வளவு காலமாக நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம். பட்டாசு வெடித்து, விருந்து சாப்பிடுவதோடு நாம் நின்று விடக் கூடாது. நம் கஷ்டம் நம்மோடு இருக்கட்டும் என்று தள்ளி வைத்து விட்டு, உலக நன்மைக்காக நம்மால் ஏதாவது செய்ய முடியும் என்றால் அதை உடனே செய்ய வேண்டும். ‘நம்மைக் காட்டிலும் உலக நன்மையே பெரிது என்று பொதுநலம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்’ என்று தீபாவளி நன்னாளில் கிருஷ்ணரிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.  (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar