Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர் பட்டாபிஷேகம்! சப்த குருநாதர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திரும்பிய பக்கமெல்லாம் தீபங்கள் எரியட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
04:10

*மனதில் இருக்கும் இருள் குணங்கள் அனைத்தும் விலகட்டும். சத்தியம், தர்மம், கருணை போன்ற தெய்வீக குணங்கள் திரும்பிய பக்கமெல்லாம் தீபமாய் ஒளி வீசட்டும்.
*சத்தியத்தின் இருப்பிடமே இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும், உண்மையையும் கடைபிடிப்பவனிடமே கடவுளின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.
*மனம் ஒரு பாலிஷ் செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. அதன் மீது துõசி படியாமல்
துõய்மையைப் பாதுகாக்க வேண்டும்.
*கடவுள் மீதான நம்பிக்கை உன்னிடம் உறுதியாக இருந்தால், எப்போதும் நேர்மையாக வாழ்வதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்து விடுவார்.
*கடவுளின் தொண்டனாக இருந்து உலகிலுள்ள அனைவருக்கும் தொண்டாற்று. ஆன்மிகத்திற்காக உன் வாழ்க்கையை அர்ப்பணித்திடு.
*இதுநாள் வரை இப்படி இருந்தோமே என்று சிந்திக்காமல் ‘இன்று முதல் இப்படி மாற வேண்டும்” என்ற ஆர்வத்துடன் பணியாற்றுபவனே புத்திசாலி.
*விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் பாறாங்கல்லாக இருக்கும் தடை கூட தகர்ந்து விடும். வெற்றிக்கான வழி திறக்கும்.
*சுயகாலில் நிற்கப் பழகு. நேர்மை, நியாயம், அடக்கமான வீரம் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கு. உன் அருகிலேயே வெற்றி காத்திருப்பதைக் கண்டு மகிழ்வாய்.
*எண்ணம், பேச்சில் தர்மசிந்தனை இருப்பதை விட செய்யும் செயல்களில் அது வடிவம் பெற வேண்டும். அதுவே உலகிற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
*மலர் தன்னை வெளிப்படுத்தும் விதத்தில் திறந்தே இருக்கிறது. நீயும் அது போல
வெளிப்படையானவாக இரு. உன் பார்வையில் சமத்துவமும், கருணையும் நிறைந்திருக்கட்டும்.
*கட்டுப்பாடு இன்றி மணத்தை வாரி வழங்கும் மலர் போல உயர்ந்த பண்புகளால் பிறருக்கு நன்மை செய்பவனே நல்ல மனிதன்.
*வாழ்வின் உண்மையான நோக்கம் கடவுளுக்காக அல்லது உண்மைக்காக வாழ்தல். நாம் இரண்டுக்காகவும் வாழ முயற்சிக்கலாம்.
*மனிதனாகப் பிறந்திருப்பது அரிய வாய்ப்பு. இதை தவற விட்டால் மீண்டும் பெற
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அரிய இந்த பிறப்பில் நற்செயல்களில் ஈடுபட்டு வாழ்வைப் பயனுள்ளதாக்கு.
*மனித உயிர்களுக்கு மட்டும் அன்பு சொந்தமானது அல்ல. தாவரம், விலங்கும் கூட
அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. கல், மண் போன்ற ஜடப் பொருட்களிலும் கூட அன்பைக் காணலாம்.
*மனக் கட்டுப்பாடு இல்லாதவன் மனிதனாக மாட்டான். கண்டிப்பு கலந்த நேர்மையுடன் கட்டுப்பாட்டை தேர்வு செய்தால் அது வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.
*சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதைக் காட்டிலும், மகத்தான பெரிய லட்சியத்திற்காக வாழ்ந்து அதில் தற்காலிகமாகத் தோல்வி அடைவது கூட மேலானது.
*தனக்கென சுயநலம் பாராட்டுவது பக்தி ஆகாது. பிறருக்காக தன்னை அர்ப்பணிப்பவனே சிறந்த பக்தன். அவனது துõய உள்ளத்தை கடவுள் விரும்பி ஏற்பதோடு வரங்களை வாரி வழங்குவார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar