ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2016 12:11
ராமநாதபுரம் : முருகன் கோயில்களில் சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்திவடிவேல் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் மாலை அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, வீதியுலா, இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நவ., 5ல் சூரசம்ஹாரம்,6ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்துள்ளனர்.