நினைத்தாலே முக்தியளிக்கும் தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். சிவபெருமானின் அடி முடியைக் காணமுடியாத திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஈசன் ஜோதிரூபமாகக் காட்சி தந்த தலம். அந்த ஜோதியே மலையானது. காஞ்சியில் தவம்புரிந்த தேவி, அந்த தவத்தை இங்கும் தொடர்ந்து சிவனுடன் சரிபாதியாகக் கலந்த தலம். ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், குகை நமச்சிவாயார் போன்ற பல ஞானிகள் வாழ்ந்த தலம். இன்றும் பல சித்தர்கள் சூட்சுமமாக வந்து வழிபடும் சிறப்புமிக்க தலம். இங்கே தேவி உண்ணாமுலையம்மன் (அபிதகுஜாம்பாள்) கருணைபொழிந்து பக்தர்களை ஆட்கொள்கிறாள்.