குருவாயூரில் நவராத்திரி பூஜை : இன்று புத்தகங்கள் பெறப்படும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2011 11:10
குருவாயூர் : விஜயதசமி உற்சவத்தை ஒட்டி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று மாலை புத்தகங்கள் பெறப்படும். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவத்தை ஒட்டி, பக்தர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு சரஸ்வதி பூஜையில் வைக்கப்படும். அதேபோல், இவ்வாண்டுக்கான பூஜைக்காக புத்தங்கள் பெறப்படுவது இன்று மாலை துவங்கும்.
இன்று மாலை 5 மணியளவில் இதற்கான நிகழ்ச்சி துவங்கும். தீபாராதனை நிகழ்ச்சி வரை புத்தகங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட புத்தகங்கள், கோவில் கூத்தம்பலத்தில் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மண்டபத்தில் பூஜைக்காக வைக்கப்படும். இன்றிரவு பூஜை நடைபெறும். நாளை நவமி தினத்தில் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 6ம் தேதி விஜயதசமி நாளில், கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப (எழுத்துக்கிருத்தல்) நிகழ்ச்சி நடைபெறும்.