உலக முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தினமாகவும், சகல ஆத்துமாக்களின் (ஆல் சோல்ஸ்) தினமாகவும் அனுசரிக்கின்றனர். இன்று காலை முதல் இரவு வரை ரோமன் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்டு, லுத்தரன் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்கு சென்று இறந்தோரை நினைவு கூர்ந்து வருவர். அனைத்து பிரிவு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. உயிர்நீர்த்த ஆத்மாக்கள் சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வழிபடும் கல்லறை தினத்தில், ஏராளமானோர் மனம் உருகி, மலர்கள் தூவி கல்லறைகளில் அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.