பதிவு செய்த நாள்
03
நவ
2016
12:11
கிருஷ்ணகிரி: கல்லறை தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் கிறிஸ்துவ மக்கள் தங்கள் உறவினர்களின் கல்லறையை அலங்கரித்து, வழிபாடு செய்தனர். கிறிஸ்துவ மக்கள் நேற்று கல்லறை தினம் அனுசரித்தனர். இதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள கிறிஸ்துவர்கள், தங்கள் உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை தூய்மைப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். ஓசூர், மதகொண்டப்பள்ளி, ராயக்கோட்டை, எலத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. கிருஷ்ணகிரி பழைய பேட்டையில், தூய பாத்திமா ஆலய பங்கு தந்தை தேவசகாயம் தலைமையில், பாதிரியார்கள் பங்கேற்று ஆத்மாக்கள் அனைத்தும் சாந்தி அடைய, சிறப்பு ஜெப வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.