சங்கு முகம் என்பது திருவனந்தபுரம் கடற்கரை பகுதிக்குப் பெயர். அங்குள்ள புராதனமான கோயில்களுள் சங்கு முகம் பகவதி கோயிலும் ஒன்று. இந்த பகவதி, குமரிக் கடலோரத்தில் தவம்புரியும் குமரியன்னையைப் போலவே காட்சி தருகிறாள். ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் இங்கு பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுவாக இந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் உற்சவங்கள் நடைபெற்று கடைசியாக சங்குமுகம் பகவதி கோயிலில் வந்து நிறைவடைகிறது.