பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
கம்பம்: கம்பம் கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில், சபரிமலை, கண்ணகி கோயில்களுக்கு செல்வோர் கம்பத்தில் இலவசமாக தங்கி செல்ல கட்டடம் கட்டப்படுகிறது. இதற்காக 15 சென்ட் தானமாக வழங்கினார்கள். நேற்று பூமி பூஜை விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் தமிழாதன் தலைமை வகித்தார். செயலர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். தமிழக சாக்கோ செர்வ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் குமார், வேளாண் உதவி இயக்குனர் ஜெயப்பாண்டியன், பாலமுருகன், புதுப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் சிவாஜிமோகன், பா.ம.க., துணைப் பொதுச் செயலாளர் பொன்காட்சிகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.