திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2016 10:11
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மன் வீதியுலா வருவதற்காக தங்கத்தேர் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், பைரவர், நந்திபகவானுக்கு வெள்ளி கவசம் செய்யபட்டுள்ளது. முக்கிய விழாக்களின் போது கவசம் அணுவிப்பது வழக்கம். இந்நிலையில் சுவாமி, அம்மன் வீதியுலா வருவதற்காக தங்கதேர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா கோயிலில் நடந்தது. செயல்அலுவலர் சந்திரசேகர், சிவகங்கை டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலு மற்றும் கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடப்பது வழக்கம். பிரதோஷத்தன்று ரத வீதிகளில் தங்கதேர் இழுப்பதென முடிவு செய்யபட்டுள்ளதாக கார்த்திகை வழிபாட்டு குழுவினர் தெரிவித்தனர்.