பதிவு செய்த நாள்
11
நவ
2016
10:11
சென்னிமலை: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் தேரோட்டம், பொங்கல் வைபோகம் நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 2ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, 6:00 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின், பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:00 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.