பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
அதற்கான, நிகழ்ச்சி நிரல்:
30.11.2016 (புதன்)- இரவு: துர்க்கை அம்மன் உற்சவம்- காமதேனு வாகனம்
1.12.2016 (வியாழன்)- இரவு: பிடாரி அம்மன் உற்சவம்-சிம்ம வாகனம்
2.12.2016 (வெள்ளி)- இரவு: விநாயகர் உற்சவம்-வெள்ளி மூஷீக வாகனம்
3.12.2016 (சனி)- காலை: 7.15 மணிக்குமேல் 8.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம். காலை: பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்
இரவு: பஞ்சமூர்த்திகள்-வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம்
4.12.2016 (ஞாயிறு) காலை: விநாயகர், சந்திரசேகரர்-சூரிய பிரபை வாகனம், இரவு: பஞ்சமூர்த்திகள்-வெள்ளி இந்திர விமானம்
5.12.2016 (திங்கள்) காலை: விநாயகர், சந்திரசேகரர்-பூத வாகனம், இரவு: பஞ்சமூர்த்திகள்-வெள்ளி அன்ன வாகனம்
6.12.2016 (செவ்வாய்) காலை: விநாயகர், சந்திரசேகரர்-நாக வாகனம். இரவு: பஞ்சமூர்த்திகள், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனம்
7.12.2016 (புதன்) காலை: விநாயகர், சந்திரசேகரர்-கண்ணாடி ரிஷப வாகனம். இரவு: பஞ்சமூர்த்திகள்-வெள்ளி பெரிய ரிஷப வாகன காட்சி
8.12.2016 (வியாழன்) காலை: விநாயகர், சந்திரசேகரர்-வெள்ளி யானை வாகனம்-63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு: பஞ்சமூர்த்திகள்-வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்
9.12.2016 (வெள்ளி)- காலை: 6.05 மணிக்குமேல் 7.05 மணிக்குள் தனுர் லக்னத்தில் விநாயகர் தேர்வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள்- மகாரதங்கள் தேரோட்டம்
10.12.2016 (சனி) காலை: விநாயகர், சந்திரசேகரர்-வெள்ளி விமானம். மாலை: 4.00 மணிக்கு பிட்சாண்டவர் உற்சவம். இரவு: பஞ்சமூர்த்திகள்-குதிரை வாகனம்
11.12.2016 (ஞாயிறு) காலை: விநாயகர், சந்திரசேகரர்- கண்ணாடி விமானம். இரவு: பஞ்சமூர்த்திகள்-கைலாச வாகனம், காமதேனு வாகனம்
12.12.2016 (திங்கள்) அதிகாலை: 4.00 மணிக்கு- பரணி தீபதரிசனம். மாலை: 6.00 மணிக்கு- மகா தீப தரிசனம். இரவு: பஞ்சமூர்த்திகள்-தங்க ரிஷப வாகனம்
13.12.2016 (செவ்வாய்)- இரவு: 9.00 மணிக்கு- அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல்
14.12.2016 (புதன்) அதிகாலை: அபிதகுசாம்பாள் சமேத அருணாசலேசுவரர் பெரியநாயகி கிரிப்பிரதக்ஷணம். இரவு: 9.00 மணிக்கு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல்
15.12.2016 (வியாழன்)- இரவு: 9.00 மணிக்கு அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல்
16.12.2016 (வெள்ளி)- இரவு: விநாயகர், வெள்ளிமூஷிக வாகனம், சண்டிகேஸ்வரர்- வெள்ளி ரிஷப வாகனம்