பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், இன்று, ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள், கனகவல்லி தாயார் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, திருமஞ்சனம், இன்று, காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. உற்சவர் வீரராகவருக்கு திருமஞ்சனமும், காலை, 10:30 மணிக்கு, கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனமும், பெருமாள் மாடவீதி புறப்பாடு, மாலை, 5:30 மணிக்கும், பெருமாள் தாயார் உள்புறப்பாடு, மாலை, 6:00 மணிக்கும் நடைபெறுகிறது.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 32 அடி உயரம் உள்ள மூலவர் ஆஞ்சநேயருக்கு இன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. மஞ்சள் நீர், பால், தயிர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை, 11:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறும்.