பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, முருகன் கோவிலில், நாளை முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடக்கிறது. எர்ணாபுரம், மகுடஞ்சாவடியில் உள்ள முருகன் கோவிலில், மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில், முருகன் மீது சூரிய ஒளி விழுவது தனிச்சிறப்பு. இந்த கோவிலில், கும்பாபிஷேகம் செய்து, ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, நாளை காலை, 7:00 மணிக்கு மேல், விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், யாக வேள்வி, கணபதி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், மகாலஷ்மி ஹோமம், 108 த்ரவியாகுதி, மஹாபூர்ணாஹூதி நடக்கும். தொடர்ந்து, சுப்ரமணியருக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், நெய் வேத்யம், பூஜை, தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். மதியம், 12:00 மணிக்கு மேல், சிறப்பு அன்னதானம் நடக்கும்.