பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பெரியமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, சந்தைபேட்டை அருகே பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில், திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா, அக்., 27ல் துவங்கியது. நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது. இன்று (நவ., 11)மாலை, 3:00 மணிக்கு, பூந்தேர் அழைத்தலும், காட்டுமிராண்டி வேடமும், வாண வேடிக்கையும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், சூரிய நாராயண மூர்த்தி பவனி வருகிறார். நாளை இரவு, 10:00 மணிக்கு, சத்தாபரண உற்சவம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 13ல், மஞ்சள் நீராட்டு விழாவும், விளையாட்டு போட்டிகளும், 14ல், சிறப்பு சொற்பொழிவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.