பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
கொடுமுடி: கொடுமுடி பா.ஜ., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் சங்கிலி ராஜன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், வேத சாஸ்திரங்களை படிக்காமல் போலி நபர்கள், பரிகாரம் செய்கின்றனர். மேலும், கோவிலுக்குள் பல்வேறு வகைகளில் கந்து வட்டி வசூல் நடக்கிறது. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்த, பிரதமர் மோடி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.