தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பலிபீடம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது.சுவாமி அலங்கரித்து கோவிலை சுற்றி தாலாட்டியபடி பக்தர்கள் வலம் வந்தனர். திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல், தியாகதுருகம் அடுத்த புக்குளம் சிவன் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவில், ஈய்யனுார், கணங்கூர், வரஞ்சரம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன்கோவில்களில் நேற்று சனிபிதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது.