பதிவு செய்த நாள்
14
நவ
2016
12:11
சேலம்: சேலம், டவுனில் உள்ள ஐயப்பன் கோவிலில், வரும், 16ல் படிபூஜை விழா நடக்கிறது. சேலம், டவுன் ரயில்வே ஸ்டஷேன் அருகே, ஸ்ரீதர்மசாஸ்தா ஆஸ்ரமம் உள்ளது. அங்குள்ள, ஐயப்பன் கோவிலில், கார்த்திகை, 1ல் படிபூஜை விழா நடக்கும். அதன்படி, வரும், 16 காலை, 6:00 மணிக்கு, பாடசாலை திறப்பு விழா நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெறும். இரவு, 7:30 மணிக்கு, ஐயப்பன் பஜனை மண்டலி குழு சார்பில், படிபூஜை விழா நடக்கிறது.