ஐயப்பன் வரலாற்றை சாஸ்தா பாட்டு என்ற பெயரில் மலையாளத்தில் பாடுவர். இந்தப் பாடலில் ஐயப்பனை ஒரு போர் வீரனாக சித்தரிப்பர். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், ÷ வளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. சேவம் என்றால் சேவகம். பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர். சனி தோஷம் நீங்க இந்தப் பாடலைப் பாடச்சொல்வர்.