Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீயும் தெய்வமாவது எப்படி ... சனீஸ்வரரை குளிர்விக்க சிவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யும் கோவில் சனீஸ்வரரை குளிர்விக்க சிவனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
சலவை தொழிலாளி கனவில் தோன்றிய லட்சுமி நரசிம்மர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சலவை தொழிலாளி கனவில் தோன்றிய லட்சுமி நரசிம்மர்

பதிவு செய்த நாள்

03 நவ
2026
10:11

மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு காவிரி, கபிலா, ஸ்பதிகா சரோவரா ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ அமைந்து உள்ளது.

பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் வாழ்ந்து வந்த சலவை தொழிலாளி, ஒருநாள் திரிவேணி சங்கமத்தில் துணி துவைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு துாங்கும் போது, அவரின் கனவில் தோன்றிய நரசிம்மர், சங்கமத்தில் தன்னுடய விக்ரஹம் இருப்பதாக கூறிவிட்டு, மறைந்தார்.

மறுநாள் நரசிம்மர் கூறிய இடத்தில் சென்று பார்த்தபோது, அவர் கூறியபடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலை இருந்தது. விக்ரஹத்தை வைத்து வணங்க கோவில் கட்ட வேண்டும். ஆனால் அதற்கான பணம் தன்னிடம் இல்லையே என்று வருந்தினர். அன்றைய தினம் மீண்டும் அவரின் கனவில் தோன்றிய நரசிம்மர், ‘தினமும் நீ துணிகளை துவைக்கும் கல்லுக்கு அடியில் புதையல் உள்ளது. அதை எடுத்து, கோவில் கட்டு’ என்று கூறி மறைந்தார்.அவரும் மறுநாள் காலை சென்று கல்லை அகற்றி தோண்டிய போது, புதையல் கிடைத்தது. அந்த புதையலை கொண்டு, தற்போதைய குஞ்சா லட்சுமி நரசிம்மர் கோவில் கட்டப்பட்டது. அவரின் பக்தியால் மகிழ்ந்த நரசிம்மர், ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு துணி துவைப்பவர், காசிக்கு சென்று கங்கையில் புனித நீராடி, என் பாவத்தை போக்க வேண்டும்’ என்று கேட்டு கொண்டார்.

அதற்கு நரசிம்மர், இனி பாவத்தை போக்க காசிக்கு செல்ல வேண்டாம். இந்த கோவிலே மிகவும் புனிதமானது என கூறி, அங்கு வழிபடுமாறு கூறினார்.

இக்கோவிலில் உள்ள மூலவர் கையில் குண்டுமணி இருப்பதை பார்க்கலாம். காசியில் உள்ள மணிகர்ணிகா கோவிலை விட, இக்கோவில் புனிதமானது என்பதை இந்த மணி குறிக்கிறது. இக்கோவிலில் நரசிம்ம பெருமாள், அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். தனது இடது தொடையின் மீது மஹாலட்சுமி தேவியை வைத்தபடி அமர்ந்திருக்கிறார்.

ஸ்ரீகுஞ்சா லட்சுமி நரசிம்மர் நான்கு யுகங்களாக இவ்விடத்தில் எழுந்தருளி உள்ளார். சத்ய யுகத்தில் பிரம்மதேவர் இறைவனை வழிபட்டார். திரேத யுகத்தில் மார்க்கண்டேய முனிவர் இறைவனை வழிபட்டார். துவார யுகத்தில் ஜெய மற்றும் விஜய பகவான்கள் இறைவனை வழிபட்டனர். கலியுகத்திலும் மனிதர்கள், இறைவனை தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar